சொகுசு பேருந்து மூலம் குட்கா கடத்திய 2 பேர் கைது.!!

கோவையில் சொகுசு பேருந்து மூலம் கடத்திச் செல்லப்பட்ட 550 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சொகுசு பேருந்து மூலம் குட்கா கடத்திய 2 பேர் கைது.!!

கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே ஆம்னி பேருந்தில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை சோதனையிட்டதில் 550 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட குட்கா ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், பேருந்தில் இருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.