வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்..;

நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு  கடத்தி வந்த போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்..;

சென்னை  விமான நிலையத்தில் வெளிநாடுகளில்  இருந்து வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனா். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு 1 பார்சல் வந்தது. அந்த பார்சலில் வாழ்த்து அட்டை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலை பிரித்து பார்த்தனர்.

அதில் 14 கிராம் எடை கொண்ட  26 பச்சை நிற போதைமாத்திரைகள் இருந்தது. அதுப்போல் அமெரிக்காவில் இருந்து ஆந்திராவிற்கு வந்த ஒரு பார்சலில் 24  கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது. மேலும் அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்திற்கு வந்த பார்சலில் 105 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது.

3 பார்சல்களில் இருந்து வந்த கஞ்சா, போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1. லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சென்னை மற்றும் ஆந்திர முகரியில் அதிகாரிகள் விசாரித்தபோது முகவரிகள் போலியானது என தெரியவந்தது.

மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், எதற்காக போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்தது, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ரூ. 1 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், 129 கிராம் எடைக் கொண்ட கஞ்சா ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை மற்றும் ஆந்திர முகவரியில் விசாரித்த போது போலியானது என தெரியவந்தது.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து எதற்காக போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை கடத்தப்பட்டு வந்தது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.  இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.