விரைவில் திமுக பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சீமான் பேச்சு...

விரைவில் திமுக பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்

விரைவில் திமுக பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சீமான் பேச்சு...

இருபது  ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் 7தமிழர் விடுதலையை வழியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று   ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் :
ராஜூவ் காந்தி கொலை மற்றும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பது துரோகம்  அதிமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்ட 100பேரில் இஸ்லாமியர்கள் இல்லை என்றும் மதத்திற்கு ஒரு சட்டம் நியாயமா  எனவும் கேள்வி எழுப்பினார்..


மேலும் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய எனக்கு வாக்களியுங்கள் என முதல்வர் பேசினார் ஆனால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று தற்போது பேசுகிறார். 7 தமிழர் விடுதலையில் எதிர்கட்சியாக இருந்த ஆர்வம் என்னவானது? விடுதலை செய்ய மறுப்பதற்கான காரணம் என்ன ? 
சட்டம் தடையாக இருக்கிறதென்றால் அதை திரும்பப்பெறவேண்டியதில் என்ன சிக்கல் என்றார், மேலும் 
இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களை விடுதலை செய்ய மறுப்பதா? இஸ்லாமியர்களின் பாதுகாவளர் என கூறும் திமுக இஸ்லாமியர்களை சிறையில் வைத்து பாதுகாப்பதா ? 


7 தமிழர் விடுதலை மாநில அரசின் கையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுப்பது ஏன்? தமிழகத்தில் பாஜக எங்கே உள்ளது 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்வதால்தான் நாடு கேவளமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் பாஜக-விற்கு அடிமைகளாக இருந்தார்கள் 
திமுக பாஜக-விற்கு கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் எனவும் விமர்சனம் செய்த அவர்,  7 பேர் விடுதலைக்கு மறுப்பு தெரிவிக்கும்  காங்கிரஸ் உடன்  திமுக கொள்கைக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கும் காங்கிரஸ் கட்சியை ஏன் கூட்டணியில் வைத்திருக்கிறது திமுக ?  மேலும் விரைவில் திமுக-பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

பாஜக-வும் கருத்து சுதந்திரத்தை நெறிக்கிறது, திமுக-வும் அதயேதான் செய்கிறது.காட்சி ஊடகங்களில் வெளிப்படுத்தியதால் தான் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, நரிக்குறவர் வீடுகளுக்கு சென்ற முதல்வர் சென்னையில் இருந்து பறையர்களை அகற்றி செம்மஞ்சேரியில் இடம்பெயர செய்தபோது ஆதிக்குடிகளின் வீடுகளுக்கு ஏன் செல்லவில்லை.

பிபின் ராவத் குறித்து மாரிதாஸ் பேசியது தவறுதான் ஆனால் மணிகன்டன் மரணம் குறித்து மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு ? கைது நடவடிக்கை தவறானது  என்றும், 
கைது செய்து மாரிதாஸ்யை பெரிய மனிதர் ஆக்கிவிட்டது திமுக அரசு என தெரிவித்தார்.