தேர்தல் கொடுத்த ஊக்கம்... ஆன்லைனில் அண்ணன் படுபிஸி... களத்தில் தம்பிகள் குஷியோ குஷி!!

தேர்தல் கொடுத்த ஊக்கம்... ஆன்லைனில் அண்ணன் படுபிஸி... களத்தில் தம்பிகள் குஷியோ குஷி!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சீமான், அடுத்தக்கட்ட ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் யாருடனும் போய் கூட்டணி அமைக்காமல், துணிந்து தன்னிச்சையாக போட்டியிட்டு கட்சியின் பெயரை நிலை நாட்டி வருகிறார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். 

இவரது மன வலிமை உண்மையாகவே பாராட்டுக்குறியது. ஆனால் 3வது கட்சியாக தேர்தலில் உருவெடுக்கும் அளவிற்கு அவரும் இரு வியூகங்களை வகுத்து செயல்பட்டதாகவும் தற்போது செய்திகள் வலம் வருகின்றன. குறிப்பாக தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர்களில் பலர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களாம். ஆதித்தமிழர் என்ற பெயரில் அவர்கள் களமிறக்கப்பட்ட முயற்சி பாராட்டுக்குரியது. ஏனெனில் அவர்கள் மூலம் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

மற்றொரு வியூகம் என்னவெனில், ஜெயலலிதா பிறந்த நாளில் அவர் சசிகலாவை சந்தித்தது தானாம். 
சசிகலாவை அவர் காரணம் ரீதியாக சந்தித்தாரோ இல்லையோ, ஆனால் இந்த சந்திப்பு தான் சீமானுக்கு முக்குலத்தோரின் வாக்குகளை கிடைக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

மக்கள் தினகரனை ஓரங்கட்டும் அளவுக்கு முன்னேறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக அக்கட்சி தோல்வியை சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்த சீமான், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்.... கொரோனா காலத்திலும் அவரது துடிப்பான பேச்சை கேட்க முடியவில்லையே என நெட்டிசன்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் சீமானோ ஆன்லைனில் படுபிஸியாக உள்ளாராம். ஏன் நமது கட்சிக்கு இந்த தோல்வி? என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? யார் சொதப்பியது? என்பது குறித்தெல்லாம் ஆலோசனை கிடையாதாம்... 234 தொகுதிகளிலும் தோல்வி என்றபோதும், அதை பற்றி துளியும் கவலைப்படவில்லையாம் சீமான்... 

ஆனால் தேர்தல் முடிவு வந்த மறுநாளே ஆன்லைன் வழியாக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இறங்கி விட்டாராம்.. குறிப்பாக கட்சி சார்பில் போட்டியிட்ட ஆண் வேட்பாளர்கள் 117 பேரிடம்,  பெண் வேட்பாளர்கள் 117 பேரிடமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். அவ்வப்போது, கொரோனா தொடர்பாக அரசுக்கு அறிக்கைகளையும் விடுத்து வருகிறார். 

இந்தநிலையில், தந்தையின் மறைவுக்கு பின் 2 நாட்கள் மட்டும் சொந்த ஊரில் இருந்த சீமான்.. மீண்டும் கட்சி பணியில் பிஸி ஆகியுள்ளாராம்.. கொரோனா காலக்கட்டத்தில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் தனது கட்சி உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பாக போன்  பேசி வருகிறாராம். 

அண்ணனை கேட்டதும் சீமான் தம்பிகள்(நிர்வாகிகள்)  வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்களாம்.!!