திருத்தப்பட்ட துறைமுகங்கள் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்..!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

திருத்தப்பட்ட துறைமுகங்கள் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்..!

பிதமர் மோடிக்கு கடிதம்:

மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் திருத்தப்பட்ட துறைமுகங்கள் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

1. மத்திய அரசின் துறைமுகங்கள் வரைவு மசோதாவானது கடலோர மாநிலங்களின் உரிமையை பாதிப்பதாகவும், துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

2. மாநிலங்களின் உரிமையை பாதிக்கக்கூடிய வகையில் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றவேண்டும் 

3. தனியாரின் பங்களிப்பு காரணமாக மாநில அரசுகளுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் தனியாருக்கு செல்ல வாய்ப்புள்ளதால், இதுதொடர்பான பிரிவுகளை நீக்க வேண்டும்

4. இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களை தனியாருக்கு கொடுக்காமல் மாநில அரசுகளுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் திருத்தங்கள் செய்யவேண்டும்

5. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற வகையில் சிறு துறைமுகங்களில் வணிகம் செய்வதை இன்னும் எளிதாக்குவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.