9 விரைவு ரெயில்களில் மீண்டும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்  : தென்னக ரயில்வே அறிவிப்பு !!

9 விரைவு ரெயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட உள்ளன என்று  தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

9 விரைவு ரெயில்களில் மீண்டும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்  : தென்னக ரயில்வே அறிவிப்பு !!

9 விரைவு ரெயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தென்னக ரயில்வே, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை சென்ட்ரல்-கே.எஸ். ஆா். பெங்களூரு லால்பாக் விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரெயில், எா்ணாகுளம்-கே.எஸ். ஆா். பெங்களூரு அதிவிரைவு ரெயில் ஆகிய மூன்று ரெயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சேர்க்கப்படவுள்ளன.

இந்த முன்பதிவில்லாத பெட்டிகள் சேர்ப்பு வரும் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதேபோல், தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் வரும் 21-ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளன.  மேலும், சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரெயிலில் 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 20-ஆம்தேதி முதல் சேர்க்கப்படவுள்ளன.

இதேபோல், மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரெயில், கோயம்புத்தூா் -திருப்பதி அதிவிரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரெயில் உள்பட 9 விரைவு ரெயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளன.