இரண்டாவது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்...!

இரண்டாவது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்...!

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதோடு 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயர்களை சேர்க்கவும், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் இன்றும் நாளையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு இடங்களில் பெயர் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகளும் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், முகவரி சான்று, வயது சான்று, அடையாள சான்று ஆகியவற்றை சமர்பித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிக்க : தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கிய யானை...நடந்தது என்ன?