இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு...67,000 பேர் தேர்வு எழுதவில்லை,ஏன் ?

இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு...67,000 பேர் தேர்வு எழுதவில்லை,ஏன் ?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 2022-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழ் தகுதித் தேர்வுக்கான கேள்விகளைத் தவிர பொது அறிவு கேள்விகளை தமிழிலேயே கேட்டதால் ஆங்கில வழி கல்வி படித்தவர்களுக்கு கடினமாக அமைந்தது.அதிகம் படித்தவர்கள் இந்தத் தேர்வில் கலந்து கொண்டதால் தங்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக குறைந்தபட்ச தகுதி உடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

Telangana Police Constable Recruitment 2022: Over 6 Lakh Appear for  Preliminary Written Exam

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு - 3552 பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு  இன்று நடைபெற்றது.

மேலும் தெரிந்து கொள்ள : கொரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்...சுகாதாரத்துறை அறிவிப்பு...

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை , புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3.66 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.சென்னையை பொறுத்தவரை கே.கே நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், வேளச்சேரி , அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் கல்லூரிகள் என 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வை எழுதினர்.

 அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் அழகப்பா பள்ளியில் 500 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 250 பேர் தேர்வு எழுத வரவில்லை.காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் 12.40 வரை நடந்தது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த சீருடை பணியாளர் தேர்வின் மூலம் ஆயுதப் படை, சிறப்பு காவல் படை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் , தீயணைப்பாளர்கள்  என மொத்தமாக 3552 பணியிடத்துக்கு  3.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்காண விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர். 

மேலும் தெரிந்து கொள்ள : கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு...அமைச்சர் சொன்ன நீயூஸ்!!

இதில் 2.99 , 887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் என தேர்வை எழுதினர். 
தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களை காவல் துறை அதிகாரிகள் சோதனை செய்து பின்னர் தேர்வு மையத்துக்கு அனுமதிக்கின்றனர். தேர்வு எழுத விதிமுறைகள் இருப்பதாலும், செல் போன், வாட்ச், சீப்பு, மொபைல் போன் போன்ற பொருட்கள் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என்பதாலும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்புகின்றனர். மேலும் தேர்வு எழுத வந்த மாணவர்கள் தங்களுக்கு தேர்வு எழுத எந்த அறை ஒதுக்கப்பட்டது என்பதையும் தங்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள பதிவெண்ணை சரிபார்த்து விட்டு தேர்வு எழுத சென்றனர்.

மேலும் தெரிந்து கொள்ள : இன்று தொடங்குகிறது 2- ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு...!

விண்ணப்பித்த 3. 66 லட்சம் பேரில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.மேலும் 70 மதிப்பெண்கள் பொது அறிவு கேள்விகளும் 80 மதிப்பெண்கள் தமிழ் தகுதி தேர்வு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதில்  தமிழ் தகுதி தேர்வு கேள்விகளை தவிர பொது அறிவு கேள்விகளும் தமிழிலேயே கேட்கப்பட்டதால் ஆங்கில வழி கல்வி படித்த தங்களுக்கு கேள்விகளை புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு பட்டம் மற்றும் அதிகம் படித்தவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவதால் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாவதாகவும், இந்த வேலைக்கு குறைந்தபட்ச தகுதி உடையவர்களுக்கு வேலை பறிபோகும் சூழ்நிலையாக அமைகிறது என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பது போல் அதிகபட்ச தகுதி நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.