பொறியியல் படிப்பிற்கு அக்டோபர்  1-ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரி பதிவு துவக்கம்...

பொறியியல்  கவுன்சிலிங்கில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்டோபர்  1ம் தேதி விருப்ப கல்லுாரிகளுக்கான பதிவு துவங்க உள்ளது. 

பொறியியல் படிப்பிற்கு அக்டோபர்  1-ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரி பதிவு துவக்கம்...

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் 17ம் தேதி துவங்கியது.6,000 இடங்கள் ஒதுக்கீடுமொத்தம் 1.52 லட்சம் இடங்களுக்கு 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது.இதில்,அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

மொத்தம் 6,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பொது பிரிவில் சேரும் மாணவர் களுக்கான, கட்டணம் செலுத்தும் வசதி நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், 14 ஆயிரத்து 788 வரை உள்ளவர்கள் மட்டும், 30-ம் தேதி மாலை 5:00 மணி வரை கவுன்சிலிங் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச ஒதுக்கீடு இந்த மாணவர்களுக்கு, அக்டோபர்  1-ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளுக்கான பதிவு துவங்கி, 2-ம் தேதி முடிகிறது. 3-ம் தேதி உத்தேச ஒதுக்கீடும், 5ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும்.இதையடுத்து, தரவரிசைபட்டியலில் இரண்டு, மூன்று, நான்காம் கட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு, படிப்படியாக கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் விருப்ப பதிவு நடந்து, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.