புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்!

புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியினரின் நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை சீமான் தொடங்கியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டிவிட்டர் கணக்குகள் நேற்று இந்தியாவில் முடக்கப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனத்தை பதிவு செய்தி இருந்தனர்.

இந்த நிலையில் செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கியுள்ளார். இந்த கணக்கில் தனது முதல் ட்விட்டாக தனக்காக குரல் கொடுத்த முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் முதல் நபராக எலான் மஸ்க்கையும் பின்தொடர்கிறார்.  

இதையும் படிக்க:சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கம்...! முதலமைச்சர் கண்டனம்...!!