பேருந்தின் பின்னால் உள்ள படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்...வீடியோ வைரல்

மதுரை அருகே பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் மேற்க்கொண்ட வீடியோ வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

பேருந்தின் பின்னால் உள்ள படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்...வீடியோ வைரல்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குலமங்கலம் செல்லும் பேருந்தில் பள்ளிக்கூட மாணவர்கள் பேருந்தின் பின்னால் இருக்கும் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துக்குள் கூட்டம் இல்லாத பொழுதும் கூட பேருந்தின் படிக்கட்டில் கல்லூரி இளைஞர்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் அடிக்கடி  தொங்கி செல்வது வாடிக்கையாக இருந்து வந்த சூழ்நிலையில் தற்சமயம் அதனையும் மீறி பேருந்தின் பின்னால் இருக்கும் படிக்கட்டில் ஏறி தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர்.

இதனை அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்டு மதுரை மக்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.