ஆபத்தை உணராமல் பேருந்தின் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்.!!

பழனியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள்  ஆபத்தான பயணம் செய்யும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தை உணராமல் பேருந்தின் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  பேருந்து நிலையத்தில் இருந்து பாலாறு-பொருந்தலாறு அணைக்கு செல்லவிருந்த பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர்  பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.

பேருந்து செல்லும்போது கால்களை தரையில் உரசியபடியே நீண்டதூரம் சென்றது பார்பவர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்தது.  

கூட்டமில்லாத பேருந்தில்   படிக்கட்டில் தொங்கியபடி  மாணவர்கள் சென்றபோதும் கண்டுகொள்ளாமல் இருந்த நடத்துனர் மற்றும்  பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தை உணராமல் மாணவர்கள் செய்யும் சாகசங்களால் பெரும்  விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் தக்க நஞவடிக்கை எடுக்கவேண்டும்