குளம் உடைந்ததால் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்...

மணப்பாறையில் குளம் உடைந்ததால் நீர் குடியிருப்புகளை பகுதிகளை சூழ்ந்தது போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கபட்டதால் பள்ளி மாணவர்கள் முழங்கால் அளவு தண்ணீர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. 

குளம் உடைந்ததால் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்...

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ராஜிவ் நகர் பகுதியில் உள்ள அப்பு அய்யர் குளம் ஏற்கனவே நிரம்பி இருந்த சூழ்நிலையில், அதன் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று பெய்த மழையால் அந்த மணல் மூட்டைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கரையும் உடைந்தது. இதனால் குளத்தில் இருந்து நீர் வெளியேறி சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. 

இதுமட்டுமின்றி ராஜிவ் நகர் பகுதியில் சாலையில் நீர் ஆர்ப்பறித்து செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியில் சாலையில் நின்று கொண்டிருக்கின்றது. இதற்கிடையே நகராட்சி அதிகாரிகள் குளத்தில் அடைப்பை சரிசெய்யும் முனைப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் நீர் ஆர்ப்பறித்து வெளியேறுவதால் சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் பாதிப்பால் இன்று காலை பள்ளிக்குச் சென்ற  மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனினும் மணப்பாறை பகுதிக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.