புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளி கல்வித்துறை...  

வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தவுள்ளது.

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளி கல்வித்துறை...   

வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தவுள்ளது.

8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மழலையர் மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைப் போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.  4,5 வீடுகள் உள்ள இடங்களுக்கு சென்று தினசரி 2 மணி நேரம் பாடம் நடத்தவும், கற்றல் குறைபாடை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீதி வகுப்பறை என்ற பெயரில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கிறது. நவம்பர் 1-ல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை அக்டோபர் முழுவதும் செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ள நிலையில், அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வீதி வகுப்பறை திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.