"புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்" நிர்மலா சீத்தராமன்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவது ஏன்? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கம்

"புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்" நிர்மலா சீத்தராமன்!

திருவாவடுதுறை ஆதினத்தால் இந்திய சுதந்திரத்தின் போது வழங்கப்பட்ட  செங்கோலை, மே 28ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

இந்த நிலையில் கிண்டி ராஜ்பவனில்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநரும்  தமிழிசை, நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தை பிரதமர்  மோடி 28 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்தார். நீதியும், நியாயமான ஆட்சியும் நடக்கிறது என்பதை நிரூப்பிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவதாக விளக்கம் அளித்தார். நேருவிற்கு வழங்கப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் சபாநாயகரின் பக்கத்தில் மரியாதைக்குரிய ஸ்தானத்தில் வைக்க உள்ளார் என்றும் கூறினார்.

Image

தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் எல்லோரையும் வரவழைத்து நேருவின் இல்லத்தில் இருந்து செங்கோல் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த  20 ஆதீனங்களை  பாராளுமன்ற கட்டிட சிறப்பு விழாவிற்கு அழைத்து செல்லப்பட்டு பிரதமரால் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இது பெருமிதமான நிகழ்ச்சி என குறிப்பிட்ட நிர்மலா சீத்தாராமன், மக்களுடைய பிரச்சனைகளை எடுத்துப் பேசக்கூடிய அந்த சபையை புறக்கணிக்க போகிறோமா ? என்பதை எதிர்கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இதையும் படிக்க8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா!: