வெள்ள நீரில் சிக்கித் தவித்த பேருந்து!!!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து சென்றதால் அரசு பேருந்து பாலத்தை கடக்க முடியாமல் பாதி வழியிலேயே நின்றது இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.

வெள்ள நீரில் சிக்கித் தவித்த பேருந்து!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் சுமார் மூன்று மணிக்கும் மேலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சிறு ஓடைகள் மற்றும் தரை பாளங்களை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கின்றன.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து தலைமலை சாலை வழியாக 30க்கும் மேற்பட்ட  பயணிகளை ஏற்றுக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நெய்தாளபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து சென்றது.

இதனை சற்றும் பொருட்படுத்தாத பேருந்து ஓட்டுனர் பாளத்தை கடக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் நடுவே அரசு பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மிகவும் அச்சத்துக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் சிலர்  உதவியோடு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்த பயணிகளை மெல்லமாக கீழே இறக்கி மறுகரைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. \

மேலும் படிக்க | விழுப்புரம் டூ தேனி நோக்கி மிதிவண்டி பயணம்...! விழிப்புணர்வை ஏற்படுத்த வந்த பனையேறி குடும்பத்தினர்..!