ஓடும் பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம்....கை நழுவி கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்....!!

வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த கல்லூரி மாணவன், கீழே விழுந்த வீடியோ காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம்....கை நழுவி கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்....!!

வேலூர் மாவட்டம்  காட்பாடியிலிருந்து செல்லும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். அதில் சிலர் ஆபத்தான முறையில் படிகட்டில் நின்றபடியும், ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடியும் சாகச பயணம் செய்தனர்.

மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்த காட்சியை பேருந்தில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். அதுமட்டுமல்லாது அவர்களை உள்ளே செல்லுமாறும் அறிவுறுத்தியதாக கூறபப்டுகிறது.

அப்போது ஜன்னல் கம்பியை பிடித்தபடி தொங்கிய மாணவர்களில் ஒருவர் கை நழுவி, கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார். அந்த சமயம் பார்த்து அரசு பேருந்தின் பின்னால் பெரிய வாகனங்கள் ஏதுவும் வராததால் மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.