திமுக கட்சிக்கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ...

தேவகோட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிக்கு பாதுகாப்பாக சென்ற தி.மு.க. கட்சிக்கொடி கட்டிய காரை போலீசார் விரட்டி பிடிக்கும் பரபரப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திமுக கட்சிக்கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தல்! இணையத்தில் வைரலாகும்  வீடியோ...
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள திருவேம்பத்தூர் பகுதியில், திமுக கட்சிக்கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன், கடத்தல் மணலை ஏற்றிச் சென்ற லாரியை, சோதனைச் சாவடியில் இருந்த புரோஸ்கான் என்ற காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால், நிற்காமல் சென்ற லாரியை அவர் விரட்டிச்செல்ல, பின்தொடர்ந்து செல்லும் கார், காவலர் மீது இடிப்பது போல தாறுமாறாக செல்கிறது.

ஒரு வழியாக கார் மற்றும் லாரியை காவலர் விரட்டிப்பிடித்த நிலையில், உதவி ஆய்வாளர் பேசுகிறார் என காரில் இருந்த நபர் செல்போனை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் பாதுகாப்புக்கு சென்ற காரை பறிமுதல் செய்யவும், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். மேலும், உதவி ஆய்வாளர் மோகன், பணத்திற்காக லாரியை பிடிக்காமல் விட்டிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.