சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு - கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலையில், சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு - கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை...

தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தேவஸ்தானம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது தேவஸ்தானத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்ததோடு, இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.