அனைத்து கடைகளுக்கும் ஒரே மாதிரியான வாடகை... விக்கிரமராஜா வலியுறுத்தல்...

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கடைகளில் வாடகை ஒரே மாதிரியான சீராக விதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

அனைத்து கடைகளுக்கும் ஒரே மாதிரியான வாடகை... விக்கிரமராஜா வலியுறுத்தல்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, அறநிலை துறைக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை விகிதத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கங்கள் சார்பில் பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.