நடமாடும் அங்காடி வாகனங்களில் பிரட் , ரொட்டிகள் விற்பனை...

நடமாடும் அங்காடி வாகனங்களில் பிரட் , ரொட்டிகள் விற்பனை...

சென்னையில் நடமாடும் காய்கறி அங்காடி வாகனங்களின் மூலம் காய்கறி , பழங்கள் குடியிருப்புதோறும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பிரட் , ரொட்டிகள் உள்ளிட்ட நொறுக்குத் தீனி வகைகளும் தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கூட்டுறவு, தோட்டக் கலைத்துறை வாகனங்கள் மற்றும்  வணிகர்களின் தனியார் வாகனங்கள் உட்பட 5,000 க்கும் அதிகமான வாகனங்கள் மூலம் சென்னையில் காய்கறி  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் காய்கறி , மளிகைப் பொருள்கள் மட்டுமே விற்பனையான நிலையில் பின்னர் பழங்கள் , முட்டை வகைகளும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் தற்போது பிரட் , ரொட்டி வகைகள் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை பொதுமக்கள் அதிகளவில் கேட்பதால் அவற்றையும் இணைத்து விற்பனை செய்து வருகின்றனர்.  சென்னை தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடியில் காலை புறப்பட்ட 15 வாகனங்களிலும் காய்கறிகளுடன் பிரட் பாக்கெட்டுகளும் அதிகளவில் இடம்பெற்றன. நாள்தோறும் 6 டன்னுக்கு குறைவில்லாமல் கூட்டுறவுத்துறை வாகனங்களில் காய்கறி விற்பனையாகும் நிலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 100 பாக்கெட்டுகள் பிரட் விற்பனையாவதாக காமதேனு நிர்வாகிகள் தெரிவித்தனர்.