சேவிங்க்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த சலுகை.. SBI வங்கி அறிவிப்பு!!

சேவிங்க்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த சலுகை.. SBI வங்கி அறிவிப்பு!!

இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து காசோலை வழியாக தினசரி பணம் எடுக்கும் உச்சவரம்பை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

மேலும் கணக்கு புத்தகத்தை பயன்படுத்தி வங்கியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான உச்சவரம்பை 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.