எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வரிசையில் மற்றொரு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ..!

எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வரிசையில் மற்றொரு  முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ..!

சமீப காலமாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வந்த நிலையில் தற்போது மற்றொரு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்:

எஸ். பி.வேலுமணி. எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட சில முன்னாள் அதிமுக  எம்.எல்.ஏக்கள் வீடுகளில் அடுத்ததடுத்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், தற்போது முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே. பி. பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

கே. பி. பி. பாஸ்கர்:

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு முறை அதிமுக சட்டமன்ற உறுப் பினராக இருந்தவர் கே. பி. பி.பாஸ்கர். இவர் நாமக்கல், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 எல். பி.ஜி டேங்கர் லாரிகள் உள்ளன. அதிமுக பொதுக்குழு உறுப் பினராகவும் பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப் பிடத்தக்கது.

மேலும் படிக்க: திமுகவிற்கு எதிராக ஒன்று சேர்கிறார்களா? அதிமுகவை இணைப்பதற்கு வகுக்கப்படும் அரசியல் வீயூகங்கள் என்ன?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து:
 
கே. பி. பி.பாஸ்கர் சட்டமன்ற உறுப் பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாஸ்கர் தனது பணிக்காலத்தில் தனது பெயர், மனைவி உமா பெயர் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்துக்களை சேர்த்ததாக கூறப்படுகிறது.

26 இடங்களில் சோதனை:

இதுகுறித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கே. பி. பி பாஸ்கர், அவரது உறவினர்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாமக்கல்லில் 24 இடங்கள், மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 26 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது