+1 தேர்வில் கிராமப்புற மாணவி தமிழில் 100/100.. குவியும் பாராட்டுக்கள்!!

+1 தேர்வில் கிராமப்புற மாணவி தமிழில் 100/100.. குவியும் பாராட்டுக்கள்!!

தமிழ்நாட்டில் 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 30 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதனை திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 11 ஆம் வகுப்பு பொது தேர்வை மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவியர்கள் எழுதிய நிலையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.99 சதவீதமாகும். 

இதேபோல்  11 ஆம் வகுப்பு பொது தேர்வை மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 355 மாணவர்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.86 சதவீதமாகும்.

இந்நிலையில், ராமாநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடி அரசு பள்ளி மாணவி சங்கீதா நடந்து முடிந்த +1 தேர்வில் தமிழில் 100 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். பின்தங்கிய கிராமப்புற பள்ளியில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதுடன் 538 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் வழி கல்வியில் பயின்று சாதனை படைத்த மாணவியை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.