ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் அபராதம் - ரயில்வே எஸ்.பி அதிரடி!

தீபாவளியை ஒட்டி ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எஸ்.பி.சுகுனா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகளை ஆய்வு செய்த ரயில்வே எஸ்.பி. சுகுனா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க : தீபாவளி : காவல்துறையின் 19 அறிவுரைகள்!

அப்போது பேசிய அவர், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும், அவ்வாறு கொண்டு வந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகுணா சிங் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக ரயில் நிலையங்களில் திருடு போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.