பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர்

பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர்

பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்தோருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், சிகிச்சை நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.