10-ஆண்டு அதிமுக ஆட்சியில் 780 கூட்டுறவு சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் 780 கூட்டுறவு சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  குற்றம்சாட்டியுள்ளார்.

10-ஆண்டு அதிமுக ஆட்சியில் 780 கூட்டுறவு சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவுத்துறை மீதான மானிய கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய ஐ பெரியசாமி, இந்த முறைகேடு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன்  விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ பெரியசாமி உறுதி அளித்திருக்கிறார்.