
தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை அடுத்த செல்வபுரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாகவும், கலப்படமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.1,800 கோடி ரூபாயில் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், குடியரசு தின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாகவும் தெரிவித்தார்.