போலீசார் தாக்கி உயிரிழந்த வியாபாரிக்கு ரூ.10 லட்சம்: தமிழக அரசு

சேலத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.

சேலம், ஏத்தாப்பூர் அருகே போலீசார் தாக்கியதில் முருகேசன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், காவலர் தாக்கி பலியான முருகேசனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவலர் தாக்கி விவசாயி பலியான துயரச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி தமது கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.