விசிக நிர்வாகியை கைது செய்யக் கோரி சாலை மறியல்!

ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி AC. பாவரசை கைது செய்யக்கோரி கிராம மக்கள்  சாலை மறியல். சாலை மறியல் போராட்டத்தால் குமுளி - திண்டுக்கல்  தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் அம்பேத்கர் சிலை முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அம்பேத்கர் சிலையை உடைத்தெரிய வேண்டும் என கோரி சிலர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிலர் இதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த முதன்மைச் செயலாளர் AC.பாவரசு பேசுகையில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியை நிர்வாகி AC பாவரசு மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் குமுளி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை காவல்துறையினர் சீர் செய்தனர்.

இதையும் படிக்க:2 வாரங்களுக்கு இபிஎஸ் பற்றி உதயநிதி பேசக் கூடாது!!