நதி நீர் இணைப்பு திட்டப் பணிகள்: சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டு ஆய்வு

சாத்தான்குளம் அருகே நடைபெறும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நதி நீர் இணைப்பு திட்டப் பணிகள்: சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டு ஆய்வு

நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், நதி நீர் இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2009ல் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தாமிரபரணி ஆறு, நம்பியாறு, மற்றும் கருமேனியாறு ஆகிய நதிகளை  இணைத்து, நதி நீர் இணைப்பு திட்டம், 369 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.

இப்பணி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது, இப்பணி மீண்டும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காடு பகுதியில் நடைபெற்று வரும் இப்பணிகளை சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பொதுப்பணித்துறை  அதிகாரிகள் பங்கேற்று, திட்டப் பணியை நிறைவேற்ற சுமூக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் கேட்டுக் கொண்டனர். இன்னும் 4 மாதங்களில், இத்திட்டப் பணிகள் நிறைவேற்ற வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.