தங்கத்தின் விலை உயர்வு.. சாமானிய மக்களின் நிலைமை..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு.. சாமானிய மக்களின் நிலைமை..?

கடந்த சில நாட்களாக ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக தங்கத்தின் திடீரென ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 616 ரூபாய் உயர்ந்து 39,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 77 உயர்ந்து ரூ.4,875 ஆகவிற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 71.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.