ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி.. வேளாங்கண்ணியில் நிகழ்ந்த நிகழ்ச்சி.. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி நிகழ்த்தப்பட்டது.

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி.. வேளாங்கண்ணியில் நிகழ்ந்த நிகழ்ச்சி.. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை!!

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கூறப்படும் ஈஸ்டர் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிலையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் பாஸ்காஒளி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கிருஸ்துவா்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிராத்தனை  செய்தனர். இதனை தொடர்ந்து, வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலயகலையரங்கத்தில், சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக  நிகழ்த்தப்பட்டது. இதில்  தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலகங்களிலும் இருந்தும் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனா்.