
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை காண வருகை தருகின்றனர் இதில் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்வது வழக்கம் இங்குள்ள தொலைநோக்கி மூலம் இயற்கை காட்சிகளை காண குவிந்து வருவர். தமிழகத்திலேயே மிக உயரமான மலைச்சிகரம் என பெயர் பெற்றிருக்கும் தொட்டபெட்டா மலை சிகரம் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு பின் ஒரு வாரம் திறந்திருந்த தொட்டபெட்டா மலைச் சிகரம் மீண்டும் மூடப்பட்டது இதனால் இங்குள்ள வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தற்பொழுது தொட்டபெட்டா செல்லும் சாலைகள் சேதமடைந்து பழுதடைந்து உள்ளதால் வனத்துறை சார்பில் தொட்டபெட்டா மலைச் சிகரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறந்துள்ள நிலையில் தொட்டபெட்டா மலைச் சிகரம் மட்டும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியை நம்பி உள்ள வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில் சுற்றுலா தலங்களை நம்பி மட்டுமே வாழ்வாதாரம் தங்களுக்கு இருப்பதாகவும் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் சாலை பழுதடைந்து உள்ளதால் தொட்டபெட்டா மலைச் சிகரம் மூடப்பட்டுள்ளது விரைந்து சேதமடைந்த சாலையை சீரமைத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என கண்ணீருடன் தெரிவித்தனர்.