ஒகேனக்கலில்  நிறைவடைந்த சீரமைப்பு பணி... அனுமதியளித்த மாவட்ட நிர்வாகம்... மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்...! 

ஒகேனக்கலில்  நிறைவடைந்த சீரமைப்பு பணி... அனுமதியளித்த மாவட்ட நிர்வாகம்... மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்...! 
Published on
Updated on
1 min read

ஒகேனக்கலில்  நிறைவடைந்த சீரமைப்பு பணி... அனுமதியளித்த மாவட்ட நிர்வாகம்... மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்...! 


சேதமடைந்த தடுப்பு வேலிகள்


காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தடுப்பு வேலிகள் முழுவதுமாக சேதமடைந்தன. 


மக்கள் விரும்பும் சுற்றுலாத் தலம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வர்.

தடையை நீக்கிய மாவட்ட நிர்வாகம் 

இதனால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் நலனை கருதி,குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்திருந்தது. தற்போது, முழுமையாக பணி நிறைவடைந்த  நிலையில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் 

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம்  அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதாலும் ஒகேனக்கலிற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com