கிருஷ்ணா நதிநீர் வரத்து எதிரொலி... பூண்டி நீர்த்தேக்கத்தில் மதகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்...

கிருஷ்ணா நதி நீர் வரத்தால் 2 கோடி ரூபாய் செலவில் பூண்டி நீர்த்தேக்கத்தின் உள்ள 16  மதகுகளில் 8.9 ஆகிய  இரண்டு புதிய மதகுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

கிருஷ்ணா நதிநீர் வரத்து எதிரொலி... பூண்டி நீர்த்தேக்கத்தில் மதகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்...
கடந்த 14ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது. பிறகு படிப்படியாக உயர்ந்து 2 ஆயிரத்து 100 கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.
 
ஏற்கனவே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 195 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாலும் தற்போது கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும் நீர்மட்டம் உயரும் என்பதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் உள்ள 16 மாதங்களில் 8 மற்றும் ஒன்பதாவது மதகுகள் சேதமடைந்து நீர் வெளியேறி வருகிறது.  
 
இதன் காரணமாக 2 கோடி ரூபாய் செலவில் புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டியில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் 8, 9 ஆகிய 2 மதகுகள்  ஷட்டர் பழுதடைந்த நிலையில் அவற்றை பராமரிக்கும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் ஏரியின் நீர்மட்டம் உயரும் பொழுது பழுதடைந்த ஷட்டர்  வழியாக  நீர் அளவு அதிகமாக வெளியேறும் என்பதால் தண்ணீர் வீணாக கடலில் செல்லும் என்பதால் மிக விரைவாக இப்பணியை முடிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆந்திராவிலிருந்து தண்ணீர் கிடைத்தும் அதை சேமித்து வைக்கும் நிலைமை இல்லாத போகும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.