மாற்றுத்திறனாளி அலுலகத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைப்பு - உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்!

குமாரபாளையத்தில், மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை இடம் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளி அலுலகத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைப்பு  - உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் இயங்கி வந்தது.ஆனால் தற்போது அந்த  அலுவலகம், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின் புறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.  

இதானல் மாற்றுத் திறனாளிகள், வந்து செல்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அத்துடன் புதிதாக மாற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

எனவே, மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை முண்டும் பழைய இடத்திறகு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திறண்ட மாற்றுத் திறனாளிகள், திடீர் காலவறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.