ஒரு முக்கிய அறிவிப்பு: இந்த ஊருக்கு செல்லும் ரயில்கள் இன்று முதல் மார்ச் 15-ந்தேதி வரை ரத்து-தெற்கு ரயில்வே!

ஒரு முக்கிய அறிவிப்பு: இந்த ஊருக்கு செல்லும் ரயில்கள் இன்று முதல் மார்ச் 15-ந்தேதி வரை ரத்து-தெற்கு ரயில்வே!

செங்கோட்டை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்-கொல்லம் ரயில்வே பாதையில் மின்மயமாக்கல் பணி தற்போது நடந்து வருகிறது.

இதன்காரணமாக இந்த பணிகளை விரைவாக நடத்திடும் வகையில் செங்கோட்டை-கொல்லம், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரெயில்கள் இன்று முதல் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.