கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை....

கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை....

வட உள் தமிழக பகுதிகளில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக, இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், தேனி ,திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்  மிக கன மழை இரு நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் இன்றும் நாளையும் ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16ம் தேதி நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழையும்  பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுவதால், அரபிக் கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.