மதுபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றும் ரேஷன் கடை ஊழியர் !!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  வேகுபட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பணி புரியும் பணியாளர் ஒருவர் மதுபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

மதுபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றும் ரேஷன் கடை ஊழியர் !!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுபட்டியில் உள்ள தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடையில் பணி புரியும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நேரத்தில் மதுபோதையில் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் பணியாளர் சத்தியபாலன் மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றும் காட்சி  தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. 

அந்த காட்சியில் சத்யபாலன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றும் போது 250 மில்லி மட்டுமே கேனில் ஊற்றுகிறார். மீதமுள்ள மண்ணெண்ணையை மதுபோதையில் கீழே ஊற்றுகிறார்.  

மேலும் அரிசி, சர்க்கரை, கோதுமை பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தமிழக அரசால் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் எனவும் மது போதையில் பணி செய்யும் சத்தியபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.