மழைநீர் வடிகால் பணி - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை வேளச்சேரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் வடிகால் பணி - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகளில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிகளை அவர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், வேளச்சேரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக வேளச்சேரி பகுதி காந்தி சாலை, ஜெயந்தி தெரு, ரவி தெரு சீதாபதி 2-வது குறுக்கு தெரு - குருநானக் கல்லூரி சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் 3 புள்ளி 87 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் வேளச்சேரி பிரதான சாலை வேளச்சேரி புறவழிச்சாலை சிக்னல் முதல் பெஸ்ட் ஹோட்டல் வரை 2 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளையும் பார்வையிட்டு பணிகளின் நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.