நெல் கொள்முதல் செய்வதில் தாமதம்... முளைவிட்ட நெல் மூட்டைகள்...

திருச்சி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் 10நாட்களுக்கும் மேலாக நெல்லை கொள்முதல் செய்யாததால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

நெல் கொள்முதல் செய்வதில் தாமதம்... முளைவிட்ட நெல் மூட்டைகள்...
திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையத்திற்கு மணிகண்டம், புங்கனூர், மேக்குடி, பாகனூர், அரசங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை  கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை குடோனில் இறக்குவதற்கு இடமில்லையென்று கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகளின் துயர்போக்க நெல்லை விரைந்து கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.