தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் மழை.. எப்போதிலிருந்து தெரியுமா?

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் மழை.. எப்போதிலிருந்து தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள சத்ரங் புயல், இரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் நாளை அதிகாலை வங்க கடற்கரையில் கரையை கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து இன்று முதல் 4 நாட்களுக்கு ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர்,  நீலகிரி, கோவை, திருப்பூரிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.