அரசு மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. இன்று விசாரணைக்கு வருமா?

நீதிபதியின் அறிவுரையை புறம் தள்ளிய ஆர்.எஸ்.எஸ்..!

அரசு மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. இன்று விசாரணைக்கு வருமா?

நீதிமன்ற அவமதிப்பு:

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி:

வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ம் தேதி அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி:

இந்நிலையில், பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் வேறுசில அமைப்புகளின் சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

இதனை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், கடந்த 22 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு:

இதை கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதிலாக தமிழக அரசின் நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினார்.

அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தல்:

ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, வழக்கை தாக்கல் செய்து எண்ணிடும் நடைமுறைகள் முடிந்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.