”ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி விவகாரம் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும்”ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

”ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி விவகாரம் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும்”ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

Published on

செந்தில் பாலாஜி  பதவி நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சட்டபடி வழக்கு தொடுக்கப்படும்  என  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தெரிவித்தார், 

வேலூர் மாவட்டம் அண்ணாகலையரங்கம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுகூட்டம் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, தமிழக ஆளுநர் ரவி செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அவ்வாறு செய்ய அவர் யார் என கேள்வியெழுப்பினார். அமைச்சரவை பதவியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, இதனை திமுக சட்டப்படி எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், மணிபூருக்கு மக்களை சந்திப்பதற்காக உயிரை பணயம் வைத்து சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்திய சம்பவமும், செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரமும் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும், அன்றைய தினம் மோடியே நினைத்தாலும் ஆளுநரை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com