ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன்பு...நாடார் சங்க அமைப்பினர் முற்றுகை போராட்டம்!

ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன்பு...நாடார் சங்க அமைப்பினர் முற்றுகை போராட்டம்!

காமராஜர் புகழை களங்கப்படுத்தும் வகையில் பேசிய தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியைக் கண்டித்து, நாடார் சங்க அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


பெருந்தலைவர் காமராஜரின் புகழை களங்கப்படுத்தும் வகையிலும், நாடார் சமூக பெண்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி தமிழ்நாடு நாடார் சங்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அதன்படி, சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர். எஸ். பாரதியின் வீட்டின் முன்பாக திரண்ட நாடார் சங்க அமைப்பினர், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.