எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள்.... முதலமைச்சர் அறிவுரை!!

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள்.... முதலமைச்சர் அறிவுரை!!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் போது, திமுக உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தின் போது, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார்.  

எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் பட்சத்தில் மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் என்றும் சட்டமன்றத்தில் பேசும் போது  எம்எல்ஏக்கள் யாரையும் புகழ்ந்து பேச வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க:   வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... பீதியில் மக்கள்...!!