ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் 108 மலர்களைக் கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் 108 மலர்களைக் கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழாவின் நிறைவு நிகழ்ச்சியான புஷ்ப யாகம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் ஆடிப்பூர உற்சவம் கடந்த 3ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் ஐந்தாம் திருநாள் ஐந்து கருட சேவையும், ஏழாம் திருநாள் சயன சேவையும் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் பதினோராம் தேதியும் நடைபெற்றது. வழக்கமாக நான்கு ரத வீதிகளில் நடைபெறும் ஆடிப்பூர திருத்தேரோட்டம் இவ்வருடம் ஊரடங்கு காரணமாக கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி தங்கத்தேரோட்டமாக நடைபெற்றது. 

இந்நிலையில் ஆடிப்பூர விழாவின் இறுதி நிகழ்ச்சியான புஷ்பயாகம் வெள்ளிக்கிழமை குறடு தங்கமண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னாருக்கு ரோஜா, மல்லிகை, சம்பங்கி, முல்லை, தாமரை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட 108 மலர்களைக் கொண்டு அர்ச்சனை மற்றும் புஷ்ப யாகம் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னாருக்கு சிறப்பு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவுப்படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் இன்றைய புஷ்பயாகத்தில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.