எதுவுமே தெரியாத பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! ஈபிஎஸ் கடுமையான விமர்சனம்..!

தந்தை மறைவுக்குப் பின் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு தங்களைப் பற்றி விமர்சனம் செய்ய தகுதி இல்லை - ஈபிஎஸ்..!

எதுவுமே தெரியாத பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! ஈபிஎஸ் கடுமையான விமர்சனம்..!

பொதுக்கூட்டம்:

சேலம், ஆட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். 

மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை:

அப்போது பேசிய அவர், அதிமுகவின் பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்வு செய்து, இடைக்கால பொதுச்செயலாளராக தான் வந்ததாகக் கூறினார். ஆகையால் தந்தை மறைவுக்குப் பின் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு தங்களைப் பற்றி விமர்சனம் செய்ய தகுதி இல்லை என சாடினார்.

எதுவுமே தெரியாத பொம்மை:

கடந்த அதிமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து அத்தனையையும் சமாளித்ததாகவும், ஆனால் இன்றைய முதலமைச்சரால் எதையும் சமாளிக்க முடியவில்லை என குற்றம்சாட்டியவர், எதுவுமே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் என விமர்சித்தார்.