பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவார் - புதுச்சேரி மாநில செயலாளர்  பேட்டி !!

வரும் 23ம் தேதி 1 மணிக்கு மேல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவார் - புதுச்சேரி மாநில செயலாளர்  பேட்டி !!

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அம்மா வகித்த பொதுச் செயலாளர் பதவியை, முன்னாள் முதலமைச்சர் தற்போதைய  எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அந்த  பதவியை வகிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டு உள்ளோம்

நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கட்சியை வழி  வளர்க்கிறோம். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மகன் முதலமைச்சரை சந்தித்து திமுகவின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும்,  திமுகவின் பி டீம் ஓ.பி.எஸ் என்றும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவது தவறு என்றும்,  நாளை நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்வது ஓ.பி,எஸ்ஸின் விருப்பம் எனவும் தெரிவித்தார். வரும் 23ம் தேதி 1 மணிக்கு மேல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் எனவும் உறுதியாக கூறினார்.